Friday 19 January 2018

01, ஹூனான் விவசாயின் இயக்கம் பற்றி ஓர் அறிக்கை (மா சே துங்) - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“சீனாவின் ஹீனான் மாகாணத்தில் 1927ம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சியைக் குறித்தும் –

அப்போது இருந்த தவறான புரிதல்கள் குறித்தும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த வலதுசாரி பிரிவான சென் டு ஷி தலைமையிலானவர்கள் மேற்கொண்ட விவசாய இயக்கத்துக்கு எதிரான செயல்பாடுகள் குறித்தும், தோழர் மாசேதுங் இந்த அறிக்கையில் தெளிவாக விளக்குகிறார்.

கோமிண்டாங் என முதலாளிகளின் ஜனநாயகக் கட்சியை திருப்திப்படுத்த விவசாய வர்க்கத்தை கைவிட்டு தொழிலாளி வர்க்கத்தை தனி மைப்படுத்தியதை அம்பலப்படுத்தி கண்டிக்கிறார். இந்த விவசாயிகள் இயக்கத்தினைப் பற்றி மேட்டுக்குடியினரும், செல்வந்தர்களும் ஏன் கட்சியிலிருந்த வலது பிரிவினரும் பேசியதற்கு மாறாக தன்னுடைய நேரடி பயணத்தின் விளைவாக கண்டதை அறிக்கையாக எழுதி கட்சியில் சமர்பித்திருக்கிறார். அதுவே ஹூனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஓர் ஆய்வறிக்கை.

1927ம் ஆண்டு ஹூனானில் வளர்ந்த விவசாய இயக்கத்தினை இரண்டு காலகட்டமாக பிரிக்கலாம்.

முதல் காலகட்டம் 1926 ஜனவரிமுதல் செப்டம்பர் வரையிலானது. அக்கட்டம் அமைப்பைக் கட்டும் காலகட்டம், அதில் ஜனவரி முதல் ஜூன் வரை தலைமறைவாக செயல்பட்டது. புரட்சிகரராணுவம் சாவோஹெங் டியை (யுத்த பிரபு) விரட்டிய காலமே வெளிப்படையான காலம், அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை.

முதல் காலக்கட்டத்தில் 3 முதல் 4 லட்சம் வரைதான் உறுப் பினர்கள் இருந்தார்கள் அமைப்பின் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டவில்லை.

ஆனால், இரண்டாவது காலகட்டமான 1926 அக்டோபர் முதல் 1927 ஜனவரி வரை சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. அதன் நேரடி தலைமையின் கீழிருந்த மக்களின் எண்ணிக்கையோ கோடிக்கும் அதிகமானது விவசாயிகள் தங்களின் பலத்தை சார்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு மாதங்களுக்குள்ளாகவே ஒரு புரட்சியைத் தோற்றுவித்தனர். ஈடு இணையில்லா சாதனை இது.

விவசாயிகளின் முக்கியத் தாக்குதல் இலக்காக இருந்தவை உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள். ஆனால், நிலபிரபுக்களை வீழ்த்துகிற போக்கில் வம்சா வரிக் கோட்பாடு, ஊழல் அமைப்புக்கள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக தங்கள் போராட்டத்தை கட்டியமைத்தனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலப்பிரபுக்களின் வாரிசாய், தகுதியாய், வளர்ந்த சலுகைகள் தூள்தூளாக்கப்பட்டது. நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை பறித்து அந்த இடத்தில் விவசாய சங்கம் அமர்கிறது.

இதுவரை மக்களை ஒடுக்கியே வந்த அதிகாரம் - இப்போது ஒடுக்கப்பட்டவர்களால் ஒடுக்கியவர்களை அடக்கப் போகிறது. மாபெரும் முழக்கம் உதயமாகிறது.அதுதான் அனைத்து அதிகாரமும் விவசாய சங்கங்களுக்கே" இது நடைமுறையிலும் சாத்தியமாக்கப்படுகிறது. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள் ஆகியோர் பேசுவதற்கான எல்லா உரிமையும் மறுக்கப் படுகிறது. பணத்தைக் கொடுத்து சங்கத்தில் சேர முயற் சிக்கும் நிலப்பிரபுக்களை நோக்கி, து. யாருக்கு வேண்டும் உன் எச்சில் காசு. என்ற வார்த்தைகள் தெறித்து விழுகின்றன.

நான்கு மாதங்களுக்குமுன்மந்தையாக இருந்த-அதாவது அப்படி அழைக்கப்பட்ட - சங்கம்தான் இப்போது மிக மிக மதிப்புக்குரியது. நகரத்துக்கு தப்பிச் சென்ற உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர்,அராஜகநிலப்பிரபுக்கள் ஆகியோர் உச்சரிக்கும் இது பயங்கரமானது” என்ற சொல், முதலாளித்துவாதிகளை மட்டுமல்ல. புரட்சிகர எண்ணம் கொண்டோரையும் பிடித்தாட்டியிருக்கிறது.

இதற்கு பதில் சொல்கிறார் மாவோ, எப்படி தெரியுமா? இது அருமையானது என்று.” மக்கள் கிளர்ந்து எழுந்து நிலப் பிரபுக்களுக்கு எதிராக போராடும் போதும், திருப்பித் தாக்கும் போதும், பயங்கரமானது என்ற வார்த்தைகள் மக்களை பாய்ந்து கடித்துக் குதறுகிறது. இதே போலத்தான் சங்கம் தேவைதான். ஆனால், அத்து மீறுகிறார்கள். என்ற போர்வையும். அத்துமீறிய உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர். அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக கிளம்பாத வார்த்தை மக்களுக்கு எதிராக கிளம்புகிறது.

யாரைகீழ் மக்கள் எனபணக்கார விவசாயிகள் இகழ்ந்தார்களோஅவர்கள் இப்போது பேரரசர்களாகிவிட்டார்கள். ஆம். மக்களின் ஆணைக்கிணங்க நிலப்பிரபுக்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இப்புரட்சியின் முன்னணியாளர்கள் யார் தெரியுமா? ஏழை விவசாயிகள்! மொத்த கிராமப்புற தொகையில் ஏழை விவசாயிகள் 70% நடுத்தர விவசாயிகள் 20% பணக்கார விவசாயிகள் 10% இருக் கிறார்கள். இதிலும் இந்த 70% ஏழை விவசாயிகளில் மிக மிக வறிய விவசாயிகள் 20%ம்; வறுமையில் வாடும் விவசாயிகள் 50%மும் இருக்கிறார்கள்.


இந்த ஏழை விவசாயிகள்தான் நம்முடைய இலக்கு அவர்கள் தான் இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள். இந்த இலக்குதான் அந்த இலக்கினை (உள்ளூர் கொடுங்கோலர் தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்கள்) தாக்கி அழிக்கும்!

No comments:

Post a Comment