மு.செல்வக்குமார் “தமிழ்ச் சமூகப் பூசகர்கள்” (பிடாரி வழிபாட்டில் வாழும் சாதி வரலாறு) என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலை பாரதிப் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
பிடாரி
வழிபாட்டு வரலாற்றை கடும் முயற்சியில் ஆராய்ந்த மு.செல்வக்குமார் இறுதியில் பிராமணருக்கு
இணையாக பறையரை வைத்து அவர்களுக்கு இடையே தொழில் போட்டியின் பகையாக காட்ட முயற்சிப்பது
ஆய்வுக் கண்ணோட்டத்தை வேறு கோணத்திற்கு இட்டுச் செல்வதாகப்படுகிறது.
தற்போதைய
பிடாரி வழிபாட்டிற்குள் காணப்படும் பண்பாட்டு வடிவங்களில் ஏற்பட்ட திரிபுகளையும் சிதைகளையும்
சுட்டிக்காட்டி, மீண்டும் இந்த மரபை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டி இருக்கிறது என்று
மு.செல்வக்குமார் நூலை முடித்திருப்பதைப் பார்க்கும் போது சாதி உரிமையின் தொடர்ச்சியை
கோரும் கோரிக்கையாகப் படுகிறது.
மக்கள்
தெய்வ வழிபாடு சாதியத்தோடு இணைந்தது என்பது தெரிந்ததே. அதை ஆராயும் போது சாதிக்குள்
சிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த நூல் சாதிய உரிமைத் தொடர்ச்சியை மீட்டுருவாக்கம்
செய்ய விரும்புவது சாதியத்தை வளர்க்கவே செய்யும். இத்தகைய ஆபத்தைக் கணக்கில் கொண்டு
இந்த நூலைப் படிக்க வேண்டும்.
பிராமணருக்கு
இணையான உரிமை கோருவது சாதியை ஒழிக்கப் பயன்படாது. இன்றைய முற்போக்களார்களின் கண்ணோட்டம்
சாதிய ஒழிப்பை நோக்கியே இருக்க வேண்டும். சாதியத்தைப் பின்தொடர்வதாக இருக்கக்கூடாது.
இழந்ததை மீட்பதாக இருக்க முடியாது. வரலாற்றை பின்னோக்கி இழுக்க முடியாது.
தலித்தியம் சாதியை ஒழிப்பதற்கானது. ஒடுக்கு முறைக்கு எதிரானது. சாதியத்தை தொடர்வதற்கோ, போற்றுவதற்கோ தலித்தியத்தில் இடம் இல்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment