(“மார்க்சியர் மேடை” என்கிற படிப்பு வட்டத்தில், லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூலின் முதல் அத்தியாயத்தை வகுப்பெடுப்பதற்கு
எழுதப்பட்ட குறிப்பு.
வகுப்பின்
காணொளி கீழே காணும் இணைப்பில் காணலாம்
https://www.youtube.com/watch?v=9jiZ8vTVP6E&t=848s
அனைத்தையும் பார்க்க:-
https://www.youtube.com/channel/UCN4ahSJzeZcpsRtuh0myX5g )
லெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்?” என்கிற இந்தப் புத்தகம், சுமார் 300 பக்கத்தைக் கொண்டது. இது ஒரு பெரிய புத்தகம் தான்.
இந்தப் புத்தகத்தை முழுமையாக, வரிக்கு வரி விளக்கப் போவதில்லை, சுருக்கமாக அதன் சாரத்தை மட்டுமே சொல்லப் போகிறேன்.
இந்தச் சாரத்தை மனதில் வைத்துக் கொண்டு புத்தகத்தைச் சுயமாக, முழுமையாகப் படிக்க வேண்டும். சாரத்தை அறிந்து கொள்வதின் நோக்கமே, புத்தகத்தை முழுமையாகப் படிக்க உதவ வேண்டும் என்பதே.
இந்த நூல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒருவகுப்பாக ஐந்து வகுப்பு எடுக்கப் போகிறேன். சுருக்கமாகச் சாரத்தை மட்டும் சொல்வதனால், ஐந்து வகுப்பில் இந்த மொத்த புத்தகத்தையும் சொல்லிவிடலாம்.
1 மற்றும் 5 அத்தியாயத்தை மிகவும் சுருக்கமாகத்
தான் பார்க்கப் போகிறோம். இடையில் உள்ள மூன்று அத்தியாயம் கண்டிப்பாக விரிவாகப் படிக்க
வேண்டியது. அந்த மூன்று அத்தியாயத்தில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதைச் சுருக்கமாக இன்று
பார்ப்போம்.
2) இரண்டாவது அத்தியாயம், “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு நிலையும்.”
சமூக- ஜனநாயகவாதிகள் – அப்படினா.. கம்யூனிஸ்டுகள்..
அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே அழைத்தனர். பல நாடுகளில்
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதானால, இந்தப் பெயரே அப்போது வழத்தில் இருந்தது.
மக்களின் தன்னியல்பு :-
மக்கள் தங்களுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு, உடனடியாக
எதிர்வினை புரிவது, தன்னியல்பு. எந்த இயக்கமோ, அமைப்போ, கட்சியோ அந்தப் பிரச்சினைக்குத்
தலைமை தாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களே போராட்டத்தில் இறங்குவது தான் தன்னியல்பு.
சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு:-
சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்றால், கம்யூனிஸ்டுகளின் உணர்வு, அதாவது வர்க்க உணர்வு.
மக்களின் தன்னியல்பான உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமே போராடுவது, ஆனால் கம்யூனிஸ்டுகள் தன்னில்பாக எழுச்சி கொண்ட மக்களுக்கு, வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும், அவர்களை வர்க்க அரசியலுக்குக் கொண்டு வரணும். இது தான் கம்யூனிஸ்டுகளின் உணர்வு.
தன்னில்பான போராட்டத்தின் எல்லைக்கும், வர்க்க உணர்வு பெற்ற போராட்டத்தின் எல்லைக்கும் உள்ள வேறுபாட்டை இந்த அத்தியாயம் விவரிக்கிறது.
3) மூன்றாவது அத்தியாயம், “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.”
தொழிற்சங்கவாத அரசியல் என்பது, வர்க்க உணர்வு ஊட்டாமல், பொருளாதார முன்னேற்றத்திறகு மட்டும் போராடுவது. அதாவது கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது. ஆனால் கம்யூனிஸ்டுகளின் போராட்டம் கூலி முறை ஒழிப்பதற்கான போராட்டம்.
கூலி உயர்வுக்கான போராட்டத்தில் தொடங்கி, கூலி முறை ஒழிவதற்கான போராட்டம் வரை கொண்டு செல்வது தான் கம்யூனிஸ்டுகளின் வர்க்க அரசியல்.
4) நான்காவது அத்தியாயம், “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”
இதுவும் மேலே கூறப்பட்ட விஷயத்தைப் பற்றியது தான், கூலி உயர்வுக்கு மட்டும் போராடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையை வெளிப்படுத்தி, அந்தப் பக்குவமின்மையைப் போக்க வேண்டும் என்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றித் தான் இந்த நான்காம் அத்தியாயம் பேசுகிறது.
இந்த மூன்று அத்தியாயத்தைச் சற்று விரிவாக வகுப்பெடுக்க வேண்டும். 1 மற்றும் 5ஆம் அத்தியாயம் சுருக்கமாக வகுப்பெடுத்தா போதும்.
ஐந்தாவது அத்தியாயம், “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””
இது குறிப்பாக அன்றைய ருஷ்ய நிலைமைக்கானது. அதனால் இதைச் சுருக்கமாகப் பார்த்தால் போதுமானது.
இன்றைய வகுப்பு முதல் அத்தியாயம். 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.
இதில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன, ஒன்று வறட்டுச் சூத்திரவாதம், மற்றொன்று விமர்சன சுதந்திரம்.
மார்க்சியம், வறட்டுச் சூத்திரவாதமல்ல, செயலுக்கு வழிகாட்டியே, எதிர்படும் புதிய நிலைமைக்கு ஏற்ப தம்மை அது வளப்படுத்திக் கொள்ளும். இதைக் கேள்விபட்டிருப்பீர்கள்.
அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது பற்றியும் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், 1) வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்” என்ற இந்த அத்தியாயம் இது பற்றிப் பேசவில்லை.
வறட்டுச் சூத்திரவாதம், விமர்சன சுதந்திரம் என்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி மார்க்சிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை, லெனின் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.
அதாவது விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று, புதியதாகக் கிளம்பியவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை லெனின் இந்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.
மார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்?
காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.
இதை நல்லா புரிஞ்சிக்கிட்டா… இந்த அத்தியாயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
பொதுவாக வறட்டுச் சூத்திரவாதம் என்றால் என்ன? மார்க்சியத்தைப் புதிய மாற்றத்திற்கு ஏற்ப உட்படுத்தாம இருப்பதையே வறட்டுச் சூத்திரம் என்று கூறுவோம். ஆனால் இவர்கள்…..மார்க்சிய அடிப்படைகளை ஊன்றி நிற்பவர்களைப் பார்த்து, வறட்டுச் சூத்திரவாதிகள் என்று இந்தப் புதிய போக்கினர், கூறுகிறார்கள்.
ஏன் என்றால் மார்க்சிய அடிப்படைகளை விடாம பின்பற்றுவது இவர்களுக்கு வறட்டுச் சூத்திரவாதம். ஆனால் கம்யூனி’ஸடுகளைப் பொருத்தளவில், இயக்கவியல் பார்வை அற்ற போக்கே வறட்டுச் சூத்திரவாதம்.
அதே போல, விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்.., மார்க்சிய அடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
காலம்மாறி போச்சு, மார்க்சிய அடிப்படைகள் காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.
அவர்கள் கூறுகிற பட்டியலை முதலில் பார்ப்போம்:-
1) கம்யூனிசத்தை விஞ்ஞான அடிப்படையில் அணுகுவதை மறுப்பது.
2) சோஷலிச சமூகமாக மாறிடும் என்கிற தவிர்க்க முடியாத தன்மையை மறுத்தல், அதாவது வரலாற்றியல் பொருள்முதல்வாதப் பார்வையில் இருந்து கூறப்படுகிற சமூக மாற்றத்தை மறுத்தல்.
3) முதலாளித்துவச் சமூகத்தில் வறுமை அதிகமாகி வருவதை மறுத்தல்,
4) முதலாளித்துவ உற்பத்தில் முரண்பாடுகள் கடுமையாகிக் கொண்டிருப்பதை மறுத்தல்,
5) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தையே மறுத்தல்.
6) “இறுதிக் குறிக்கோள்” என்று கூறுவதையே மறுத்தல்.
மொத்தத்தில் அவர்கள் கூறவருவது இதுவே:-
புரட்சிகரமான கம்யூனிசக் கோட்பாடுகளை விடுத்து, முதலாளி வர்க்க சார்பான, சமூகச் சீர்திருத்தவாதத்தைக் கொண்டுவருதல்.
முதலாளித்துவ வர்க்கம் பல காலமாக மார்க்சியத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை, இந்தப் போக்கினர், கம்யூனிசத்தின் பேரால் “விமர்சன சுதந்திரம்” வேண்டும் என்ற போர்வையில் வைக்கின்றனர். அவ்வளவு தான்.
இந்தப் போக்கினர் கோருகிற சுதந்திரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்ப்போம்.
“விமர்சன சுதந்திரம்” என்பது கம்யூனிசத்தில் சந்தர்ப்பவாதப் போக்குக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிற சுதந்திரம்,
புரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம்,
கம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும் புகுத்துவதற்கான சுதந்திரம்.
இந்தப் போக்கை லெனின் புதிய வகைச் சந்தர்ப்பவாதம் என்கிறார்.
இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்.
சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை.
புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது.
புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.
கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.
மார்க்சிய அடிப்படைகளை வீடாது பிடித்துக் கொண்டிருப்பவர்கள், வைதீக மார்க்சியவாதிகளாம். இவர்கள் தான் உண்மையான மார்க்சியவாதிகளாம். விமர்சன சுதந்திரத்தை இவர்கள் தான் பின்பற்றுவது போலப் பாசாங்கு செய்கிறார்கள்.
இந்தப் பாசாங்குக்காரர்களின் சீர்திருத்த போக்க் எதிர்த்து, கம்யூனிசத்தில் இருக்கும், விஞ்ஞானத் தன்மையையும், புரட்சிகரனமான போக்கையும் நாம் காப்பாற்ற வேண்டும். இந்த அத்தியாயம் நமக்கு இதைத் தான் போதிக்கிறது.
லெனின் வழியில்,
“திருத்தல்வாதம் எதிர்ப்போம் மார்க்சியம் காப்போம்”
என்று
கூறி, இந்த வகுப்பை முடித்துக் கொள்கிறேன்.
தோழர் வகுப்பு குறிப்புகள் மிகச்சிறப்பு தோழர் எனக்கு எளிமையாக இருந்தது உங்கள் பணி தொடர எனது புரட்சிகர வாழ்த்துக்கள்
ReplyDeleteதோழர் நான் தோழர் மு.கதிரவன் மா.லெ.மா
ReplyDeleteநன்றி, மகிழ்ச்சி தோழர்
ReplyDelete