Saturday 12 March 2022

மாவோ எழுதிய “செவ்வேடு” (Red Book) (மாசேதுங்கின் மேற்கோள்கள்) நூலின் சாரம் (இணைப்பு)

 

மாவோ எழுதியசெவ்வேடு” (Red Book) (மாசேதுங்கின் மேற்கோள்கள்) நூலின் சாரம்

மாவோவின் மேற்கோள்களைக் கொண்ட நூலான செவ்வேடுஎன்பதையே இன்றைய வகுப்பில் பார்க்கப் போகிறோம். இந்த நூலின் முழுப்பெயர் மாசேதுங்கின் மேற்கோள்கள்இதனைசெவ்வேடுஅல்லதுசிறிய செவ்வேடுஎன்றும் அழைக்கப்படுகிறது.

1927 முதல் 1964வரை மாவோ பேசிய உரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள் ஆகியவற்றில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கோள்கள், 33 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மொத்த மேற்கோள்கள் 427.

இந்த செவ்வேடு என்கிற சிறிய நூல் சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியின் போது, 1964 முதல் 1976 வரை பரவலாக வினியோகிக்கப்பட்டது. அதன் பிறகு பல அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.

தமிழில் புதிய ஜனநாயகம் 1987 ஆம் ஆண்டு தமிழில் வெளியிட்டது. தொடர்ந்து பல பதிப்புகளைக் கண்டது. புதியதாக மார்க்சியத்தைப் படிப்பவர்கள் இந்த நூலை தொடக்கத்தில் படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது இது ஒரு மேற்கோள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த மேற்கோள்கள் எந்த சூழ்நிலையில் எதற்காகக் கூறப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மேற்கோள் சுட்டும் நூலை எடுத்துப் படிக்க வேண்டும். ஒரு பொதுப் புரிதலுக்கு இந்த மேற்கோள்கள் போதுமானது, ஆனால் ஆழமான புரிதலுக்கு அந்தந் நூல்களை எடுத்து முழுமையாகப் படிக்க வேண்டும்.

 

1) முதல் பகுதி (1-3)

2) இரண்டாம் பகுதி (4-14)

3) மூன்றாம் பகுதி (15-25)

4) நான்காம் பகுதி (26-3)

No comments:

Post a Comment