Sunday 1 January 2012

மார்க்சிய சமூகவியல் கொள்கை

நா.வானமாமலை

அலைகள் வெளியீட்டகம்
4/9 இராகவேந்திரா கெஸ்ட் ஹவுஸ்,
4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி.
கோடம்பாக்கம், சென்னை-600 024
விலை: ரூ.50/-
1974ல் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், சுப்பிரமணின், முத்துமோகன், மங்கை ஆகிய ஆறுபேர்களுக்கு நா.வானமாமலை அவர்களால் எடுக்கப்பட்ட வகுப்பின் விரிவாக்கமே இந்நூல்.

சமூக வளர்ச்சி பற்றிய மார்க்சிய முதலாசிரியர்களின் வழிநின்று விளக்கப்பட்டுள்ளது.

கீழ் காணும் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

1. மார்க்சிய தத்துவத்தின் மூன்று உட்கூறுகள்
2. வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
3, உற்பத்தியும் - உற்பத்தி உறவுகளும்
4. உற்பத்தி சக்திகள் -  புரட்சி
5. வர்க்க சமுதாய அமைப்புகள்
6. தற்கால வர்க்கப் போராட்டங்கள்
7. முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்திற்கு மாறும் பொழுது வர்க்கப்போராட்டம்
8.மார்கசிய சமுதாயப் புரட்சிக் கொள்கை
9. அரசு பற்றிய மார்ச்சியக் கொள்கை
10. பாட்டாளி வர்க்கப் புரட்சியும், அரசும்
11. சோஷலிசப் புரட்சியும் அரசும்
12. சோஷலிச அரசின் தன்மையும் கடமையும்

வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் உள்ளடக்கமாக நா.வானமாமலை கூறுகிறார்:-
"ஒரு சமுதாயத்தில், அதற்குத் தேவையான பொருளகளின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் இவற்றிற்கும், அச்சமுதாயத்தில் வாழும் மக்கள் இப்புறநிலைப்பற்றி மனதில் கொண்டிருக்கும் சிந்தனைகளுக்கும் தொடர்பு உண்டு. இந்தச் சிந்தனைகள் புறநிலை உண்மைகளின் பிரதிபலிப்புகளாக. அவற்றிற்கு ஏற்றதாக இருக்கும். இந்த உறவின் அடிப்படை பொருள் உற்பத்திதான். எனவே உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி முறையில் மக்கள் கொள்ளும் உறவிற்கும் உள்ள தொடர்பே இத்தத்துவத்தின் உள்ளடக்கம்"

மார்க்சிற்கு முந்தைய தத்துவ ஆசிரியர்கள் அனைவரும் மனிதனிடம் காணும் சிந்தனையின் தோற்றத்தையும். மாற்றத்தையும் அறுதியிட்டு கூறமுடியாது என்ற முடிவில் இருந்தனர்.  மேற்கட்டமைப்பை அறுயிட்டு கூறிமுடியும் என்ற முடிவிற்கு மார்க்ஸ் வந்தடைந்தது பற்றி நா.வானமாமலை கூறுகிறார்:-
"மனிதன் உற்பத்திச் செய்யும் போது அதன் விளைவாகத் தோன்றும் அனுபவ சிந்தனைப் பிரதிபலிப்புத்தான் சிந்தனை அல்லது கருதது. பொருள்தான் மூலம். சிந்தனை அதிலிருந்து பெறப்படுவது (Derivative). எனவே வரலற்றியல் பொருள்முதல்வாதம் என்பது ஒவ்வொரு காலகட்டங்களின் உற்பத்தி முறைகளின் கீழ் மனிதர்கள் எத்தகைய உறவுகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை விளக்குவது, வாழ்க்கைக்கும். உற்பத்தி உறபத்தி முறைக்கும் உள்ள உறவை அறியாததனால். மேற்கோப்புகளான. பிரதிபலிப்புகளான தத்துவம். கலை. இலக்கியம். சட்டம் போன்ற கருத்துககளையே வாழ்க்கையின் அடிப்படையாகக் கருதியதில் இருநது முரண்பட்டு மார்க்ஸ். எங்கெல்ஸ் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை உற்பத்தி முறையின் அடிப்படையில் அமைத்தனர்"

இந்த மார்க்சிய விளக்கத்தின் அடிப்படையில் இந்நூல் முழுமையும் அமைந்துள்ளது
-----------------------
தொடர்பான நூல்கள்.



விலை :ரூ.60/-
                                                -அ.கா.ஈஸ்வரன்
                செந்தழல் வெளியீட்டகம்.

2. மார்க்சியம் சில போக்குகள்   விலை :ரூ.35/-
                                -எஸ். தோதாத்ரி
                நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

                -மாரிஸ்கார்ன்பார்த்
                நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், முதல்பதிப்பு 2008.


No comments:

Post a Comment