Tuesday 3 January 2012

வரலாற்று இயல் பொருள்முதல்வாதம்


மாரிஸ் கார்ன்பார்த்

தமிழில் எஸ்.தோதாத்ரி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
முதற்பதிப்பு: மே 2008

வீலை: ரூ.75/-

நூல் மதிப்பீடு

விஞ்ஞான கண்டுபிடிப்புகள், பெரும் தொழிற்சாலைகள் ஆகிவற்றின் வளர்ச்சியை பார்க்கும் போது,   உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டத்தை அறிந்து கொள்ள முடிகிறது. லாப வேட்கை கொண்ட இந்த முதலாளித்துவ அமைப்பால் இந்த உழைப்புச் சக்திகளைக் கொண்டு அனைத்து மக்களின் தேவைகைள நிறைவு செய்திட முடியாமல் இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கே இந்த சாதனைகள் பயன்படும்படியாகவும் பெரும் பான்மையினரது வாழ்வு அடிப்படை தேவைகளைக் கூட அடைய முடியாத நிலையே இச் சமூகத்தில் இருக்கிறது.

முதலாளித்துவம் தோற்றம் பெற்ற போதே இதன் சுரண்டல் தன்மையை உணர்ந்த சிலர் இதனை எதிர்த்தனர். ஆனால் அவர்களது கருத்து கற்பனா வாதமாக காணப்பட்டது. அவர்கள் சிறந்ததொரு சமூக அமைப்பு பற்றிக் கற்பனை செய்தனர், அதற்கு வடிமும், அழகும் கொடுத்தனர். அது பற்றி அதிகமாகவே பேசினார்கள். ஆனால் அதனை எவ்வாறு அடைவது என்று அவர்களால் கூறமுடியவில்லை.

முதலாளித்துவ அமைப்பு அறிவுக்குப் பொருததமற்றது, நியாயமற்றது என்று கற்பனாதவாத சோஷலிஸ்ட்டுகள் சமூகத்தி விமர்சித்தனர். அவர்களது கருததுபபடி சோஷலிசம் என்பது அறிவையும், நீதியையும் அடிப்படையாக கொண்டிருந்தது. அறிவு என்பதை அனைவருக்கும் பொதுவாது என்ற அடிப்படையில் எல்லோரையும் சமமாகவே மதிப்பிட்டனர். அதனால் செல்வாக்கு மிக்க ஆளும் வர்க்கத்தினரை அணுகு சோஷலிசத்தின் உண்மையை உணர்த்தினால் போதும் நடைமுறைபடுத்திவிடலாம் என்று நம்பினர்.

இந்த கற்பனாவாத சோஷலிசம் என்பது சிறந்த மனிதர்களின் சிந்தனையின் விளைவாய் தோன்றியது. சமூக வளர்ச்சியின் விதிகளை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் கருத்துக்களை கூறவில்லை. சமூகத்தை மாற்றி அமைக்கும் ஒரு புதிய சக்திகளை அவர்களால் இனங்காண முடியவில்லை.

காரல் மார்க்ஸ் அந்த சக்தியை இனங்கண்டு கூறினார். அந்த சக்தியே உழைக்கும் வர்க்கம். இதன் அடிப்படையில் மாரிஸ் கார்ன்பார்த் மேலும் கூறுகிறார்:-
"உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் சூழ்நிலையே, அவர்களை ஒன்றுபடவும், ஸ்தாபன ரீதியாக திரளவும் செய்கிறது. முதலாளித்துவத் தாக்குதலிருந்து தங்களைப் பாதுகாக்கவும், அபிவிருத்தி செய்யவும் செய்கிறது. முதலாளித்துவத்தை அகற்ற இடம் பெறும் தொழிற்சங்கப் போராட்டம் அதனை நீக்கிவிடுவதில்லை, இதற்கு மாறாக, பொருளாதார லட்சியங்களுக்காக மட்டுமே உழைக்கும் வர்க்கம் போராடினால், அது முதலாளித்துவத்தினடமிருந்து சலுகைகளை மடடுமே பெறுகிறது. அதன் இருப்பை ஏற்றுக்  கொள்கிறது. முதலாளித்துவத்திற்குள்ளாகச் சீர்த்திருத்தம் என்ற கட்டத்தை மீறி அது செல்ல வேண்டுமானால். அது சோஷலிசக் கொள்கை என்பதன் மூலம் தான் கடந்து செல்ல முடியும், அப்பொழுதுதான் முலாளித்துவத்தை அகற்றுவது என்ற நீண்ட கால லட்சியத்ற்கான உணர்வைப் பெற முடியும், இந்த லட்சியத்தை அடைவதற்கான தந்திரத்தையும், நடைமுறையையும் அது உருவாக்க முடியும்.

உழைக்கும் வர்க்க இயக்கத்தின் வரலாற்றில், முதலாளித்துவத்திடமிருந்து சலுகைகள் பெறுவதற்கு அப்பால் சிந்திக்காத தலைவர்கள் இருந்திருக்கின்றனர். இதுதான் அந்த இயக்கத்தின் சந்தர்ப்பவாதம் தோன்றுவதற்கு ஆதாரமாக இருக்கிறது. அதாவது உழைக்கும் வர்க்கத்தின் நீண்டகால நலன்களைப் புறக்கணித்து விட்டு, அந்த வர்க்கத்தின் பல்வேறு பிரிவினருக்கு தற்காலிக லாபம் பெறும் முயற்சி இது ஆகும். உழைக்கும் வர்க்கத்தின் இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் என்பது, அந்த இயக்கம் முழுவதற்கும் சீர்திருதததிற்கான தன்னிச்சையான போராட்டத்தை ஏற்றுக் கொள்வது ஆகும்." (பக்கம் 7-8)

மார்க்சியத்தின் மிகப் பெரிய பங்களிப்பாக, விஞ்ஞான சோஷலிசக் கொள்கையை வளர்த்ததும், அதனை உழைக்கும் வர்க்க இயக்கத்தில் இணைத்ததையே குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தெரித்த மாரிஸ் கார்ன்பார்த் சோஷலிசத்தை அடையவற்கு வழியாக வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை இந்நூல் வழியில் விவரிக்கின்றார்.

மாரிஸ் கார்ன்பார்த் சமூக வளர்சசி பற்றிய விஞ்ஞான முறையில் புரிதல் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகப் பொருளாதார அமைப்பிற்கான பிரத்தியேக விதிகளை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்.இதற்கு மார்க்ஸ் குறிப்பிடும் அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற கருததாக்கத்தின் மூலம் விவரிக்கிறார். சமூகத்தின் அடிப்படையாக ஒரு குறிப்பிட்ட பொருளாதார அமைபபு உருவான பின்னர் அந்த அடிப்படைக்கு பொருத்தமாக கருத்துக்களும் நிறுவனங்களும் வளர்ச்சியடைகின்றன.

இதற்கு ஸ்டாலின் எழுதியதை குறிப்பிடுகிறார்
"மேல் கட்டுமானம் தீவிர செயல்திறன் உள்ள சக்தியாக மாறுகிறது. அடிப்படை வலுப்பெறுவதற்கு தீவிரமாக உதவுகிறது. அதற்கு துணையுரியவும் ஒருவடிம் கொடுத்து பலப்படுத்தவும். பழைய அழிந்து கொண்டிருக்கும் அடிப்படையை ஒழிக்கவும். அது மேல்கட்டுமானத்தை உருவாக்கிறது"

இதனை கோட்பாடுபோல் மனப்பாடம் செய்து கொண்டால் சமூக வளர்ச்சியின் விதிகளை புரிந்ததாகாது. கருத்துககள், நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியைக் காணும் பொழுது முககியமானது அவற்றிற்கு எதையும் சாராத வளர்ச்சி என்பது கிடையாது, அவை சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி என்ற அடிப்படையின் மீது தான் தோன்றி வளர்கின்றன. இதனை மாரிஸ் கார்ன்பார்த் கூறுகிறார்:-
"எனவே ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கள் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட காலகட்டப் பொருளாதார சூழ்நிலைகளில் இருந்து நேரடியாகப் பெற முடியாது. எங்ல்ஸ் கூறுகிறார் "பொருளாதாரம் முழுமையாகப் புதியதாக ஒன்றை உருவாக்குவதில்லை. நடைமுறையில் உள்ள சிந்தனை அமைப்புகள் மாற்றப்படுவது, வளர்க்கப்படுவதை அது தீர்மானிக்கிறது"" (பக்கம் 164)

இதன் அடிப்படையில் சமூகப் புரட்சிக்கு வழிகாட்டுகிறார் மாரிஸ் கார்ன்பார்த்.
"சமூக வளர்ச்சிக்கான அடிப்படையான விதி உற்பத்திமுறை மாறுதல்களைக் கட்டுப்படுத்தும் விதி ஆகும். இதன்படி, உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு இசைவாக இருகக வேண்டும். இந்தி விதியின்படி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நடைமுறையில் உள்ள உற்பத்தி உறவுகளுடன் முரண்படுகிறது. இது சமூகப் புரட்சிக்கு இடமளிக்கிறது. பழைய உற்பத்தி உறவுகளை  அழிக்கிறது. புதிய உறவுகளை ஏற்படுத்துகிறது. பழைய ஆளும் வர்க்கத்தினை அகற்றுகிறது. புதிய வர்க்கம் அதிகாரத்தை பிடிக்க வழிகோலுகிறது." (பக்கம் 133)

சமூக புரட்சிக்காக போராடும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவரும் ஒருமுறை கண்டிப்பாக நேரடியாக படித்தறிய வேண்டிய நூலாகும்.

கட்சிகள் இன்றைய நிகழ்வோடு இந்நூலை பாடம் நடத்தி விளக்கினால் பயன் உறுதியாக கிடைக்கும்.
------------------------------
இது தொடர்பான நூல்கள்.

விலை :ரூ.60/-
                                                -அ.கா.ஈஸ்வரன்


2. மார்க்சியம் சில போக்குகள்   விலை :ரூ.35/-
                                -எஸ். தோதாத்ரி
                நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,

நா.வானமாமலை
அலைகள் வெளியீட்டகம்
4/9 இராகவேந்திரா கெஸ்ட் ஹவுஸ்,
4வது முதன்மைச் சாலை,
யுனைடெட் இந்தியா காலனி.
கோடம்பாக்கம், சென்னை-600 024

No comments:

Post a Comment