(“செங்கொடி மையம்” என்கிற வாசகர் வட்டத்தில் எடுக்கப்பட்ட வகுப்புகள்)
ஐந்து தரிசனங்கள்-ஐந்து தத்துவங்கள்
சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், மீமாம்சை ஆகியவைகளே ஐந்து தரிசனங்கள் ஆகும். இந்த ஐந்து தரிசனங்களும் உபநிடத தத்துவப் போக்குக்கு மாறானது, ஏதிரானது என்றுகூட சொல்லாம். இந்த மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் தங்களை உத்திர மீமாம்சை என்று பிற்காலத்தில் வைதீகர்கள் கூறிக் கொண்டு, ஐந்தாவது தரிசனமான மீமாம்சையில் ஒட்டிக் கொண்டனர். ஓட்டிக் கொண்டதோடு மட்டுமில்லாது, இந்த ஐந்தையும் வைதீகத் தத்துவம் என்று ஆதாரமற்று கூறிவருகின்றனர். என்ன செப்பிடுவித்தை செய்தாலும் ஐந்து தரிசனங்களும் வேதாந்தத்தோடு (உபநிடதங்களோடு) முரண்படுவதை வைதீகர்களால் மறுத்திட முடியாது.
ஐந்து தரிசனங்களும் வைதீக சிந்தனைக்கு மாறான, எதிரான போக்கு உடையவை என்பதையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
1) கடவுள் மதம் ஆகியவற்றின்தோற்றத்துக்கு முன்பான நிலைமைகள்
8) உபநிடதம் - பிரம்ம சூத்திரம் ஆகியவை பற்றிய சிறிய அறிமுகம்
9) 9. பகவத் கீதை எளிய அறிமுகம் - 1 ( பக்தி யோகம்)
No comments:
Post a Comment